மதுரை தீ விபத்தில் மேலும் ஒரு உயிரிழப்பு : சிகிக்கை பெற்று வந்த விடுதி மேலாளர் இன்று பலி!
Another death in Madurai fire accident Hotel manager who was receiving treatment died today
மதுரை பெரியார் நிலையம் அருகே உள்ள கட்ராபாளையத்தில் விசாகா என்ற பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 12ம் தேதி அதிகாலை 4 மணியளவில் விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் பெரியார் நிலையம் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், தீ விபத்தில் சிக்கிய பெண்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. இருந்த போதிலும் தீ விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். மேலும் உயிரிழந்த 2 பேரும் சரண்யா, பரிமளா என அடையாளம் காணப்பட்டனர்.
இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட போது, அடுத்தடுத்து தீ பரவி கரும்புகை எழுந்தது. இதனால், பெண்களுக்கு மூச்சு திணறல் மற்றும் சுவாச கோளாறு பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதி மேலாளார் புஷ்பா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
English Summary
Another death in Madurai fire accident Hotel manager who was receiving treatment died today