தொழிற்சாலை அபகரிப்பு வழக்கு! ஜெயக்குமாரின் மகள் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!
Anticipatory bail petition
தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாரின் மகள், மருமகன் ஆகியோர் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 கோடி ரூபாய் மதிப்பிலான தனது தொழிற்சாலையை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் மருமகள் மீது சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயப்பிரியா உள்ளிட்டோரை கைது செய்யக் கூடாது என்று அறிவுறுத்தி, அவர்களுக்கு முன்ஜாமீன் அளிப்பது குறித்து பதிலளிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
English Summary
Anticipatory bail petition