ஆப்பிள் நிறுவனம் திருமணமான பெண்களுக்கு வேலை தருவதில்லையா? !! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியா தனது ஆலையில் திருமணமான பெண்களை பணியமர்த்தவில்லை என தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் அமைச்சகம், தமிழக தொழிலாளர் துறையிடம் அறிக்கை கேட்டு கோரிக்கை வைத்துள்ளது. 

இது தொடர்பாக, மத்திய அமைச்சகம் ஜூன் 26 ஆம் தேதி அன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் திருமணமான பெண்களை நிறுவனம் வேலைக்கு அமர்த்தவில்லை என அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஆப்பிள் மற்றும் ஐபோன்களை தயாரிக்கும் இந்தியாவின் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தென்னிந்திய தொழிற்சாலையில் திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம்,  சுமார் 30 வயதுள்ள இரண்டு திருமணமான பெண்கள் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் வேலைக்கு விண்ணப்பிக்க சென்ற போது, ஆலைக்கு வெளியே நின்றிருந்த ​​காவலாளி அந்த பெண்களிடம் திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டதற்கு, ஆம் என்று அந்த இரண்டு பெண்கள் பதிலளித்தபோது, ​​காவலாளி அவர்களை வெளியில் இருந்து திருப்பி அனுப்பி உள்ளார். 

இதைத் தொடர்ந்து இந்த விஷயம் வேலை தேடுபவர்களுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, பஸ் ஸ்டாண்டில் இருந்து தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்ற பஸ் டிரைவர், திருமணமான பெண்களுக்கு இந்த நிறுவனம் வேலை தருவதில்லை என கூறியதாக மேலும் சிலர் தெரிவித்துள்ளனர்.

பாக்ஸ்கான் தொழில் நிறுவன ஊழியர்கள், திருமணமான பெண்களை தொழிற்சாலையில் பணியமர்த்துவதில்லை என நிறைய குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. ஏனெனில் திருமணமாகாத பெண்களை விட திருமணமான பெண்களுக்கு பொறுப்புகள் அதிகம். இதனால், அவர்களால் சமமாக பணிகளை செய்ய முடியாமல் போகிறது. இதன் காரணமாக, நிறுவனம் திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்க்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Apple industry not hiring married women


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->