அவமானம் இல்லையா? அதிமுகவை கேட்டியா? அமேசான் காட்டுக்குள்ள போய் கேட்டியா - அறப்போர் இயக்கம்!
Arappor Close Tasmac
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், சென்னையில் கண்டெய்னர் லாரியின் கீழ் அமர்ந்து, பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த காணொளி ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காணொளியை பகிர்ந்து அரப்பூர் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கள்ள சாராயத்தை ஒழிக்க தான் டாஸ்மாக் சாராய கடை நடத்துகிறோம் என்று சாராய ஆலை முதலாளிகள் நிறைந்த கட்சிகள் சொல்வார்கள். நம்பாதீர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அறப்போர் இயக்கத்தின் மற்றொரு பதிவில், "டாஸ்மாக் சாராயம், கள்ள சாராயம் மற்றும் விஷ சாராயம் என தமிழகம் முழுவதும் சாராய ஆறு ஓடிக் கொண்டு இருக்கிறது. இதனால் பல குடும்பங்கள் சித்திரவதைக்குள்ளாகி செத்து மடிகிறார்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுகவினர் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
நாங்க மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொன்னோம். ஆனால் நீங்க எங்களை வெற்றி பெற வைக்கவில்லை. அதனால் வெற்றி பெற்றவுடன் குடித்தே சாவுங்கள் என்று சாராயம் விற்கிறோம். 12 மணிக்கு திறக்க வேண்டிய சாராய கடையை காலை 7 மணிக்கே திறந்து கள்ள சாராயம் விற்கிறோம்.
அரசாங்கமே இதை செய்வதால் காவல்துறை ஒன்றும் செய்ய முடியாது. அதிக விலை என்று டாஸ்மாக் வராமல் இருப்பவர்களையும் விடாமல் அவர்களுக்கு வீட்டிற்கே விஷ சாராயம் சப்ளை செய்ய வைத்து கொல்கிறோம். கும்பலாக செத்து போனால் அப்போ கூட, பாருங்க இப்படி சாக கூடாது என்பதால் தான் மக்கள் மீது கருணை வைத்து எங்கள் முதல்வர் சாராயம் விற்கிறார் என்று பெருமையாக பேசுவோம்.
அரசாங்கமே சாராயம் விற்று குடும்பங்களை சீரழிப்பது அவமானம் இல்லையா என்று கேட்டால், அதிமுகவை கேட்டியா, அமேசான் காட்டுக்குள்ள போய் கேட்டியா என்று அவதூறு விங்கை அனுப்பி கடிக்க வைப்போம்" என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.