சிகாகோ: CM ஸ்டாலின் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும் - அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட அறப்போர் இயக்கம்!
Arappor Iyakkam say About Nellai Stone Robbery issue CM Stalin
சிகாகோவில் சைக்கிள் ஓட்டுவதைப் போன்ற விடியோவை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப். 4) காலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த விடியோவைக் குறிப்பிட்டு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் இருக்கும் சில பிரச்னைகளை குறிப்பிட்டு விமர்சனமும் முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், அறப்போர் இயக்கம் முதல்வர் ஸ்டாலினின் இந்த காணொளியை எடிட் செய்து, ஒரு முக்கிய பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.
அதில், "நெல்லையில் செயல்படும் சட்ட விரோத குவாரிகளால், அதாவது அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக மிக அதிகமாக கல் வெட்டி எடுத்தும், அனுமதி வாங்காத அரசு மற்றும் பட்டா நிலங்களில் குவாரிகள் அமைத்தும் கல் வெட்டி எடுத்து, அண்டை மாநிலத்துக்கு கடத்துவதால் அந்த பகுதி மக்கள் எண்ணில்லா துயரத்திற்கு உள்ளாகிறார்கள்.
இந்த குவாரி கொள்ளையர்களின் கடத்தல் லாரிகள் செல்வதால் மக்கள் பயன்படுத்தும் சாலைகள் சின்னாபின்னம் ஆகி இருக்கின்றன.
ஆனால் இது குறித்து அறப்போர் ஆதாரங்களை திரட்டி கொடுத்த புகாரை விசாரிக்க கூட அந்த துறை அமைச்சர் துரைமுருகன் தயாராக இல்லை.
ஆகையால் இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிடுகிறோம். முதல்வர் ஸ்டாலின் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்" என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
700 கோடி கல் குவாரி கொள்ளை குறித்த வீடியோ:
English Summary
Arappor Iyakkam say About Nellai Stone Robbery issue CM Stalin