சந்தன மரக் கடத்தலில் சிக்கிய பேராயர் செல்லப்பா!
Archbishop Chellappa caught in sandalwood smuggling
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோயிலில் சிஎஸ்ஐ தேவாலய பேராயர் செல்லப்பா வீட்டில் இருந்த நான்கு சந்தன மரங்கள் அவரது உதவியுடன் வெட்டி கடத்தியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் குறித்து சிஎஸ்ஐ பேராயர் சபையின் நிர்வாகிகள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், வனத்துறை செயலாளர், மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினர். இதனை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பேராயர் இல்லத்தில் இருந்த சந்தன மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.
பேராயர் வீட்டில் வெட்டப்பட்ட சந்தன மரத்தின் பகுதிகளை மறைத்து வைத்திருந்தது வனத்துறையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த சோதனையில் ஏராளமான சந்தனம் கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் புகார் அளித்தவர்கள் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு மாவட்ட வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதனை அடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரி முன்பு ஆஜரான பேராய சபை நிர்வாகிகள் செல்லப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து பேராய நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மெய்யப்பன் மீது காவல்துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
English Summary
Archbishop Chellappa caught in sandalwood smuggling