அதிமுகவின் முக்கிய புள்ளியை அதிரவைத்த நெல்லூர் மோசா!  - Seithipunal
Seithipunal


அரியலூர் அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏ காரில் இருந்த பணத்தை திருடிய ஆந்திர மாநிலம், நெல்லுரை சேர்ந்த 33 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த அன்னிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ப. இளவழகன். அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான இவர், கட்சியின் மாவட்டச் செயலாளராகவும், சுற்றுலா வளர்ச்சி துறை முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தற்போது அரியலூர் அழகப்பா நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் இளவழகன், சம்பவம் நடந்த அன்று அரியலூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து காரின் பின்புற இருக்கையில் வைத்துள்ளார்.

பின்னர் வீட்டுக்கு வந்து பார்க்கும்போது காரில் இருந்த அந்த பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இளவழகன் சம்பவம் குறித்து அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவி காட்சி மற்றும் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இலவழகனின் காரிலிருந்து பணத்தை திருடி சென்றது ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த 33 வயது இளைஞர் மோசா என்பது தெரிய வந்தது. 

இளவழகன் வங்கியில் பணம் எடுத்து வருவதை வெகு நேரமாக நோட்டமிட்டு இருந்த மோசா, அவர் அசந்த நேரத்தில் காரில் பின்புறம் இருந்த பணத்தை திருடி சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், கிடைத்த தகவலின்படி, அரியலூர் செந்துறை சாலை அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பதுங்கி இருந்த மோசவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பணத்தை மீட்டு இலவழகன் இடம் ஒப்படைத்தனர்.

மேலும் மோசா மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur ADMK Ex MLA money Roiberry case


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->