அரியலூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை! மக்களுக்கு திடீர் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் சுற்றித் திரிந்த சிறுத்தை அரியலூர் மாவட்ட பகுதியில் சுற்றி வருவதாக நேற்று தகவல் பரவியது. இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தேவை இன்றி யாரும் வெளியில் வர வேண்டாம் எனவும் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே அரியலூர் மாவட்டத்தில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur all schools Holiday 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->