லாரி மீது கார் மோதி கோர விபத்து: 4 பேர் பரிதாப பலி!  - Seithipunal
Seithipunal



அரியலூர், ஏலாக்குறிச்சி அருகே அரியலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. 

அப்போது வேகமாக வந்த கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur car collided lorry 4 killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->