தமிழக அரசு பயந்து போய்விட்டது... சிலரின் கைது அதிர்ச்சியளிக்கிறது... பா. ரஞ்சித் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


பகுஜன்சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் நாள், சென்னை பெரம்பூரில் அவர் புதிதாக கட்டி வந்த வீட்டின் முன் வைத்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பாக பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்யும்படி கூலிப்படைகளை ஏவி விட்டவர்கள் யார்? என்பதைக் கண்டறிய வேண்டும், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும், அதற்காக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், பகுஜன்சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று பகுஜன் சமாஜ் கட்சி, நீலம் பண்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் எழும்பூர் முதல் வள்ளுவர் கோட்டம் வரை பேரணியும், போராட்டமும் நடத்தப்பட்டது. 

போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, அவரது 2 வயது மகள் சாவித்திரி பாய், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்டோர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறை, போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், தமிழகம் முழுவதும் ஆம்ஸ்டிராங் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, கொலை வழக்கு விரைவாக செயல்படுவதற்கான தேவையை ஏற்படுத்தி உள்ளோம். மக்கள் கேள்வி எழுப்பியதால் அரசு பயந்து போய், விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. 

உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யும் வரை எங்களின் இந்த போராட்டம் தொடரும், பின்வாங்கப் போவதில்லை. சிலரின் கைதுகள் பெரும் எதிரியை கொடுத்தன. காரணம் ஆம்ஸ்ட்ராங்குடன் இருந்த நபர்களே கொலைக்கு உறுதுணையாக இருந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong murder case Pa Ranjith  


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->