திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதி! உதயநிதி ஸ்டாலின்!
Artist Karunanidhi laid the foundation for the Dravidian model Udayanidhi Stalin
திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் ஆறாவது நினைவு நாளை முன்னிட்டு அவரது தொண்டர்களும் அவரது கட்சி நிர்வாகிகளும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில்,திமுக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் ஆனால் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதள பக்கமான எக்ஸலத்தில் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,
சொல்லாகவும் - செயலாகவும் நம் நினைவெல்லாம் நிறைந்து, நாள்தோறும் வழி நடத்திக் கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று. மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலருண்டு; அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர்.
கலைஞர் அவர்களின் தொலைநோக்கு, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி, உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தது. கலைஞர் அவர்களின் கொள்கை உறுதி, சமூக நீதி - மாநில சுயாட்சி - மொழி உரிமை எனும் தமிழ்நாட்டின் அரசியல் முழக்கத்தை, பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கச் செய்திருக்கிறது.
ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் ; வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட இயக்கக் கொள்கைகளின் வழியில் திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் நம் கலைஞர் அவர்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம். கலைஞர் புகழ் பரவட்டும் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்!
English Summary
Artist Karunanidhi laid the foundation for the Dravidian model Udayanidhi Stalin