ஆருத்ரா மோசடி.."திடீர் முற்றுகை போராட்டம்".. பரபரப்பில் கமலாலயம்.. ஓட்டம் பிடித்த கேச விநாயகம்..!! - Seithipunal
Seithipunal


சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேரிடம் 25% முதல் 30% வட்டி தருவதாக கூறி 2,438 கோடி ரூபாயை மோசடி செய்தது. இது தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாமாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். 

மீதமுள்ள 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அரிசிக்கு என எந்த வருமானமும் இல்லாத நிலையில் அவர் பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் ஆருத்ரா நிறுவனத்தின் மற்றொரு பெண் இயக்குனரான மாலதி என்பவரையும், நடிகரும் ஆருத்ரா நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ரூபா என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவரிடமேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நடிகர் ஆர்.கே சுரேஷ்க்கு இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ரூ.12 கோடி கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நடிகர் ஆர்.கே சுரேஷுக்கு நேரில் ஆஜராகும் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இதற்கிடையே இன்று காலை ஆருத்ரா மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை டி.நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆருத்ரா நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். ஆருத்ரா மோசடி தொடர்பாக பாஜகவினருக்கு தொடர்பு இருப்பதாக கோஷமிட்ட நிலையில் மாநில நிர்வாகியான கேசவ விநாயகத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளிக்க முயன்றுள்ளனர்.

ஆருத்ரா நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த மனுவை வாங்க மறுத்ததோடு, விட்டால் போதும் என அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். ஆருத்ரா நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த டி.நகர் போலீசார் போராட்டக்காரர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arudhra scam victims lay siege to BJP office


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->