ஆருத்ரா நிறுவன மோசடி.."90 மூட்டைகளில் சிக்கிய ஆவணங்கள்".. சென்னையில் இருவர் கைது..! - Seithipunal
Seithipunal


சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி தமிழக முழுவதும் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் ராஜ், பாஜக நிர்வாகி ஹரிஷ் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அனைவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ள நிலையில் அவர்கள் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் வழங்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நடிகரும் அண்ணாமலையின் நெருங்கிய நண்பருமான நடிகர் ஆர்.கே சுரேஷ் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார்.

இந்த நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் மேலும் இரண்டு பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் செந்தாமரை என்பவரையும் இன்று சந்திர கண்ணன் என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆருத்ரா கோல்ட் ரேட்டிங் மோசடி விவகாரம் கைது செய்யப்பட்ட ராஜா செந்தாமரை கூடுதல் இயக்குனராக செயல்பட்டு ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் தொடர்பான விளம்பரங்கள் அனைத்தையும் செய்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக நிர்வாகி ஹரிஷ் என்பவருக்கு கூடுதல் இயக்குனராக செயல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மற்றொரு நிர்வாகியான சந்திர கண்ணன் என்பவரை அண்ணா நகரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். சந்தரக்கண்ணன் முதலீட்டாளர்களிடமிருந்து பணம் பெற்றது தொடர்பாக 90 மூட்டைகளில் தொடர்பான ஆவணங்களை பதுக்கி வைத்திருப்பது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ராஜா செந்தாமரை மற்றும் சந்தரக்கண்ணன் ஆகிய இருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 5 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது. அண்ணா நகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த முதலீட்டாளர்கள் ஆவணம் மூட்டைகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அண்ணா நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arudra fraud case documents hidden in 90 bundles and two people arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->