மிஸ்டு காலால் சிக்கிய சிக்கன் ரைஸ் மாஸ்டர்! மங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக நெல்லையில் விசாரணை! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் தட்சிணகண்டம் மாவட்டத்திற்கு உட்பட்ட மங்களூர் நகர் நாகூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆட்டோ ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுனரும் பயணியும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஆட்டோவில் இருந்த குக்கரில் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்த அடையாளங்களை தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

மேலும் இந்த சோதனையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய வயர்கள் பேட்டரிகள் உட்பட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மக்கள் அதிகம் செல்லக்கூடிய மங்களூர் ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக ஆட்டோவில் சவாரி செய்த பணி குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஆட்டோவில் பயணம் செய்த நபரின் செல்போனை ஆராய்ந்த போலீசார் அதில் பதிவான எண்களின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நீலகிரி மாவட்டத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டார் பகுதியைச் சேர்ந்த நபரிடம் இன்று காலை முதல் தமிழ்நாடு சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மங்களூர் ஆட்டோ வெடிகுண்டு விபத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு நாகர்கோவிலில் இருந்து ஒரு நபருடன் தொடர்பு கொண்டதாக மங்களூர் போலீசார் கன்னியாகுமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் அந்த நபரிடம் தமிழ்நாடு சிறப்பு புலனாய்வு அமைப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் சந்தேகிக்கப்படும் நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜீம் ரகுமான் என்பது தெரியவந்துள்ளது.

இவர் கோட்டார் பகுதியில் உள்ள ஓட்டலில் சிக்கன் ரைஸ் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவர் வேலை செய்யும் ஓட்டல் உரிமையாளரின் மனைவிக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து ஒரு நபர் போன் செய்து இந்தியில் பேசியுள்ளார். அஜிம் ரகுமானுக்கு இந்தி தெரியும் என்பதால் மீண்டும் அவரே போன் செய்து சம்பந்தப்பட்ட நபரிடம் பேசியுள்ளார். ஆனால் எதிர் முனையில் பேசியவர்கள் சரியாக பதில் பேசவில்லை என போலீஸ் விசாரணையில் அஜீம் ரகுமான் கூறியுள்ளார்.

மங்களூரில் ஏற்பட்ட ஆட்டோ வெடிகுண்டு சம்பவத்தில் அஜிம் ரகுமானுக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும், இவர் அசாம் மாநிலத்தில் என்ன வேலை செய்து வந்தார். நாகர்கோயிலில் எவ்வளவு காலமாக பணிபுரிந்து வருகிறார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நள்ளிரவு அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் எந்த ஆதாரங்களும் சிக்கவில்லை. 

நாகர்கோயிலில் பணிபுரியும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவருடைய நண்பர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜிம் ரகுமான் வேலை செய்யும் ஹோட்டல் உரிமையாளர் தரப்பிலிருந்தும் மிஸ்டு கால் வந்ததால் அஜீம் ரகுமான் தொடர்பு கொண்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாகர்கோயில் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam youth interrogated in Nagercoil in connection with auto blast


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->