ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டசபை - எப்போது தெரியுமா?
assembly speaker appavu announce assembly meeting starting date
கடந்த மூன்று ஆண்டுகளாகவே ஆளுநர் ரவி சட்டசபையில் தனது உரையை படிக்காமல் புறக்கணித்தார். மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லையென்றும், பெரியார் பெயரை புறக்கணித்தும் படித்தார். இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஆளுநர் முன்னிலையிலேயே முதலமைச்சர் முக.ஸ்டாலின் எதிர்ப்பு தீர்மானமும் கொண்டுவந்தார்.
இந்த நிலையில், இந்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி மாதம் 6ஆம் தேதி ஆளுநர் உரையோடு சட்டப்பேரவை தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் தமிழக ஆளுநர் உரை நிகழ்த்த இருப்பதாகவும், இந்தாண்டு ஆளுநர் உரையை முழுவதுமாக படிப்பார் என்று நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர் பேரவையில் ஆளுநருக்கு உரை நிகழ்த்ததான் அனுமதியே தவிர, சொந்த கருத்துகளை கூற அல்ல. அவையின் உள்ளே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி உண்டு.
இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். சட்டப்பேரவைக்கும் இது பொருந்தும். இந்த ஆளுநர் உரை கூட்டமானது எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தொடர்பாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
assembly speaker appavu announce assembly meeting starting date