பட்டியலின சிறுவனை அடித்து காலில் விழ வைத்த சம்பவம் -  மதுரையில் அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டி அருகே சங்கம்பட்டி கிராமத்தில் புரட்டாசி மாதம் நடைபெற்ற திருவிழாவின்போது, பட்டியலின சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டது. 

இதையடுத்து அந்த சிறுவன் கடந்த சில மாதங்களாக வீட்டிற்கு வராமல் மதுரை விக்கிரமங்கலம் பகுதியில் வசித்து வந்தார். அப்போது எதிர்பிரிவை சேர்ந்த சிலர் பயங்கர அயுதங்களுடன் விக்கிரமங்கலம் கிராமத்திற்கு சென்று தேடியுள்ளனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த சிறுவன் சொந்த ஊரான சங்கம்பட்டிக்கு வந்துள்ளார். இதையறிந்த மாற்று சமூகத்தை சார்ந்த ஆறு பேர் அவரை கடத்திச் சென்று ஊர் கண்மாய் அருகே வைத்து அடித்து சித்ரவதை செய்ததோடு அனைவரின் காலிலும் விழச்செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து அந்தச் சிறுவனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக சிறுவனின் தந்தை போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதே கிராமத்தைச் சார்ந்த 6 பேர் மீது 4 பிரிவின் கீழ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

attack to sheduled cast boy in madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->