#சற்றுமுன்: விநாயகர் சிலை வைப்பவர்களின் கவனத்திற்கு.. போலீஸ் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தியில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலை வைக்க வேண்டும் என்று சென்னை மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

முழுமுதல் கடவுள் என்று போற்றப்படுபவர் விநாயகர். கணங்களின் தலைவன் என்று போற்றப்படுவதால் அவரை கணபதி என்று அழைப்பார்கள். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இந்த வருடம் ஆவணி 11ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. வரும் செப்டம்பர் 31-ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த விநாயகர் சதுர்த்திக்கு முன்னேற்பாடுகள் இப்போதே துவங்கிவிட்டது. நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட படக்கூடிய பண்டிகை தான் இந்த பிள்ளையார் சதுர்த்தி.

விநாயகர் சிலைகளை தயாரித்து விநாயகர் சதுர்த்தியன்று பூஜைகள் செய்து அதை ஆற்றில் அல்லது நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலை வைக்க வேண்டும் என்றும், அப்படி அனுமதிக்க படாத இடங்களில் சிலை வைத்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், ஆவடி, தாம்பரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் 3200 சிலைகளை வைத்துக்கொள்ள காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதை மீறி அனுமதிக்கப்படாத இடங்களில் சிலைகளை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் கடமையாக தண்டிக்கப்படுவீர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attention for Vinayagar statue putting


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->