செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள் அமைக்கப்படும்.. அமைச்சர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகியது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை வாசித்தார். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழகத்தில் இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள் அமைக்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண் பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

டெல்டா பகுதியில் பாசன கால்வாய்களை தூர்வார ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்படும்.

38 கிராமங்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் மையங்கள் அமைக்க ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தென்னை, மா, கொய்யா, வாழை தோட்டங்களில் ஊடுபயிர்களை ஊக்குவிக்க ரூ.27.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Automatic pump sets running through cell phones will be set up tn budget


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->