தள்ளு., தள்ளு., தள்ளு மாடல் தமிழக அரசு பேருந்து! கலாய்த்து தள்ளிய மக்கள்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் : ஆரணியில் மாநகரப் பேருந்தின் பேட்டரி பழுதடைந்ததால், பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்யும் அவலநிலை அரங்கேறியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இங்கிருந்து மக்களின் வசதிக்காக ஆவடிக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடந்த வாரங்களாக ஆரணிக்கு வரும் மாநகர பேருந்துகள் மிக பழுதடைந்த நிலையில் வருவதாக பயணிகள் குற்றசாட்டுகின்றனர்.

மேலும், குறித்த நேரத்தில் பேருந்துகள் வருவதில்லை என்றும், இரவு மற்றும் விடியற்காலையில் பேருந்து சேவை இல்லாமல் உள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், ஒரு பேருந்துதின் செல்ப் மோட்டார் மற்றும் பேட்டரி பழுது காரணமாக, பேருந்தை பயணிகள் உதவியுடன் தள்ளி தள்ளி ஸ்டார்ட் செய்யும் அவலநிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்த புகைப்படம் ஒன்று வெளியாகவே, இது என்ன தள்ளு., தள்ளு., தள்ளு மாடல் தமிழக அரசு பேருந்தா என்று மக்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

avadi aarani bus issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->