அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மார்பில் குத்திய காளை, மாடுபிடி வீரர் பலி!
Avaniyapuram Jallikattu Young man death
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, விளாங்குடியைச் சேர்ந்த நவீன் குமார் மாடு முட்டியதில் பலியாகியுள்ளார்.
இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்ற இளைஞரின் மார்பில் மாடு குத்தியது.
உடனடியாக படுகாயமடைந்த நவீன் குமாரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நவீன்குமார் உயிரிழந்து அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Avaniyapuram Jallikattu Young man death