கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு - இருவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன்.!!
bail to two peoples for kallakurichi fake liquor issue
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம், மாதவச்சேரி, சங்கராபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி, தாமோதரன் உள்ளிட்டோர் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான தாமோதரன், கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜூவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் ஜாமின் வழங்க சி.பி.ஐ. தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
English Summary
bail to two peoples for kallakurichi fake liquor issue