பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 3 கோடிக்கு விற்பனையான ஆடுகள்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் உள்ளது.

இந்த வார சந்தையில், தங்களது ஆடுகளை விற்பனை செய்வதற்காக காட்டுசெல்லூர், சேந்தநாடு, வட குரும்பூர், கிளியூர், மடப்பட்டு, ஆசனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். 

வழக்கமாக இந்த சந்தையில் ஆடுகள் சுமார் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை மட்டுமே விற்கப்படும். ஆனால், அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது. 

இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சந்தையானது, திண்டுக்கல், மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்.

இந்நிலையில், 8 ஆயிரம் ஆடுகள் முதல் 35 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையான நிலையில் சுமார் 3 மணி நேரத்தில் 3 கோடி அளவுக்கு வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bakrid fastival goats sales 3 crores


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->