சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி! தென்காசி நோக்கி படையெடுக்க தொடங்கிய பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை அதிகரிக்கும் காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். 

இந்த தண்ணீர் மலைகளில் உள்ள மூலிகை செடிகளின் வழியாக வருவதால் அங்கு குளிப்பதற்காக உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன் அடிப்படையில் நேற்று காலை முதல் தென்காசி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பரவலாக பெய்ய தொடங்கியது. 

இதனால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

இன்று காலை மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைவாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு அதிகமாக இருப்பதால் அங்கு குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரம், பழைய குற்றாலம் மற்றும் சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளுக்கும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால் குற்றாலத்தில் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் தென்காசி நோக்கி படையெடுக்க தொடங்கினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban extended tourists invaded gushing water


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->