தமிழகத்தில் மயோனைஸ் விற்பனைக்கு தடை - அதிர்ச்சியில் அசைவ பிரியர்கள்.!!
ban mayonnaise in tamilnadu
தமிழகத்தில் பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பச்சை முட்டை, எண்ணெய், சோடியம் நிறைந்த உப்பு ஆகியவற்றை கொண்டு தயார் செய்யப்படும் உணவு பொருள் மையோனைஸ். இந்த மயோனைஸ் அதிக கலோரி மற்றும் கொழுப்பு நிறைந்தது. சாண்ட்விச், பர்கர், கிரில் சிக்கன், மோமோஸ், ஷவர்மா போன்ற உணவுடன் இந்த மையோனைஸ் சேர்த்து சாப்பிடப்படுகிறது.

ஆனால், இந்த மயோனைஸ் சில சமயங்களில் உடல் நலத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மையோனைஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மையானசில் பச்சை முட்டை பயன்படுத்துவதால் கிருமிகள் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஓராண்டுக்கு மையோனைஸை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ban mayonnaise in tamilnadu