விழுப்புரம் || உனக்கு சூடு இல்லை சொரணை இல்லை முண்டமே! சாட்டையால் அடித்த சமுக ஆர்வலர்! - Seithipunal
Seithipunal


திமுக எம்எல்ஏ பிறந்தநாளுக்கு சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனர்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் பேருந்து நிலையம் அருகில் திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் பிறந்த நாளை முன்னிட்டு விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ளது. சாலையை ஆக்கிரமித்து பேனர் வைத்தும், அரசு கட்டிட சுவர்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் பிரகாஷ் என்பவர் பேனரை அகற்றக் கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் காவல்துறையை கண்டித்து தலை இல்லா பொம்மைக்கு சவுக்கு அடி கொடுத்துள்ளார். இது சம்பந்தமான வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் சமூக ஆர்வலர் பிரகாஷ் பேசியதாவது "தமிழக டிஜிபி பார்வைக்கு செல்லும் வரை இந்த வீடியோ பகிரவும்! விழுப்புரம் நீதிமன்றம் முன்பும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பும் சாலை மறித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது! இது சம்பந்தமாக விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை! எனவே விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளரை கண்டித்து இந்த நூதன போராட்டம் முண்டமே!

உனக்கு சூடு இல்லை சொரணை இல்லை முண்டமே! அதுபோல் அதிகாரிகளும் உள்ளனர் முண்டமே! தமிழக டிஜிபி யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை முண்டமே! வழக்கு பதிவு செய்திருந்தாலும் தண்டனை பெற்று தந்துள்ளாரா முண்டமே! புகார் தந்தால் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை வாங்கி தந்தால் அடுத்த முறை யாராவது செய்வார்களா முண்டமே! என அந்த வீடியோவில் சாட்டையால் அந்த தலை இல்லா பொம்மையை அடித்துக் கொண்டே பேசி உள்ளார்.  இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Banners occupied the road for DMK MLA birthday viral video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->