மாண்டஸ் புயல் தாண்டவம்.. பெசண்ட் நகர் பீச்சில் சேதமடைந்த கடைகள்.! வியாபாரிகள் அச்சம்.!
Beach Damage In mandous Storm
மாண்டஸ் புயலின் காரணமாக பல கடலோரப் பகுதியில் கடல் சீற்றத்துடன் அலைகள் மேலே எழும்பி வருகின்றன. இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சிற்றுண்டி கடைகளில் கடல் நீர் புகுந்துள்ளது.
பெசன்ட் நகர் கடற்கரையில் 5 அடி வரை கடல் அலைகள் மேலே எழும்பி கடுமையான சீற்றத்துடன் காணப்படுகின்றது. மேலும் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மரப்பாதையின் முகப்பு பகுதி உடைந்து சேதம் அடைந்துள்ளது.
மரக்கட்டைகளை கொண்டு அமைக்கப்பட்டு இருந்த மாற்றுத்திறனாளிகளின் நடைபாதை சேதமடைந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கரையை ஒட்டி இருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் சிற்றுண்டி கடைகள் அனைத்தும் சீற்றத்தால் நாசம் அடைந்துள்ளது வியாபாரிகளை கவலை அடைய வைத்துள்ளது.
English Summary
Beach Damage In mandous Storm