சென்னையில் பெரும் அதிர்ச்சி!...துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு!
Big shock in Chennai dismembered womans body found
சென்னை மாவட்டம், துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியில் சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொது மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை மீட்டு திறந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சூட்கேசில், பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுக்கபட்டுள்ளது.
இதையடுத்து பெண்ணின் உடலை மீட்ட போலீசார், இது குறித்து தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ள போலீசார், சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? கொல்லப்பட்டது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை துரைப்பக்கத்தில் சூட்கேசில் இருந்து பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Big shock in Chennai dismembered womans body found