'வடமாநிலத்தவர்கள் தாக்குதல்.. போலி வீடியோ.'பீகார் அதிகாரிகள் குழு திட்டவட்டம்.!
Bihar Govt sent a Team and investigation about North Indian attack fake Video
வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியதை தொடர்ந்து இந்த விஷயம் பேசு பொருளாக மாறியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கள் மாநில தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்களா என்பதை விசாரணை செய்ய பீகார் அதிகாரிகள் குழு ஒன்று தமிழகத்திற்கு வந்தது. அதிகாரிகள் விசாரணை நடத்திய பின்பு தெரிவித்துள்ள தகவலில், "பீகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கூறினார்கள்.
அடுத்ததாக கோவை திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று புலம் பெயர் தொழிலாளர்களை சந்திக்க இருக்கிறோம். இது பற்றி தமிழக அரசுடன் ஆலோசிக்க உள்ளோம்.
சமூக வலைதளங்களில் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வெளியான போலி வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம். அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி." என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Bihar Govt sent a Team and investigation about North Indian attack fake Video