இஸ்லாமியர்களை “தலைப்பாகை அணியாதே” என்று சொல்ல துணிவு இருக்கா? இந்து மதத்தை கொச்சைபடுத்தி பேசும் திமுக - கொந்தளிக்கும் பாஜக! - Seithipunal
Seithipunal


தமிழநாடு பாஜக விடுத்துள்ள அறிக்கையில், "மதநம்பிக்கைகளை புண்படுத்தி ஆனந்தம் கொள்வதை என்று நிறுத்தும் திமுக?

தொடர்ந்து இந்து மதத்தை கொச்சைபடுத்தி பேசும் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜா தற்போது மேலும் ஒரு படி சென்று திமுகவின் மாணவரணியினர் திலகமிடக் கூடாது என்று மேடையில் முழங்கியுள்ளார்.

மதநல்லிணகத்தை பேணும் ஜாம்பவான்களாய் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் திமுக, இந்து மதத்தினரின் நம்பிக்கைகளை தொடர்ந்து கொச்சைபடுத்தி அவர்களின் பழக்கங்களை விட்டொழிக்க பாடுபடுவது ஏன்?

வாக்குவங்கிக்காக தீவிரவாதிக்கு பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் திமுக அதே வாக்குவாங்கிக்காக இந்து மதத்தினரின் பழக்க வழக்கங்களை வேரோடு சாய்ப்பதில் உறுதி பூண்டுள்ளதா?

இப்படி தொடர்ந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டு மதநல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றைக் குறித்து பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை என்பதை உணர வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

இதேபோல் பாஜக ஹெச் ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஆயிரம் சூரியன்கள் உதித்தாலும், என்றும் அழியாது எங்கள் இந்துமதம்! 

இஸ்லாமிய சகோதரர்களைப் பார்த்து “தலைப்பாகை அணியாதே” என்று சொல்ல துணிவற்ற ஒருவர், கிறிஸ்துவ சொந்தங்களிடம் “சிலுவை அணியாதே” என்று கூற திராணியற்ற ஒருவர், “பொட்டு வைக்காதே, திருநீற்றை அழித்துவிடு” என்றெல்லாம் இந்துக்களிடம் மட்டும் குரல் உயர்த்துகிறார் என்றால்,  அவரை என்னவென்று அழைப்பது? “இந்துக்களின் விரோதி” என்றும் அழைக்கலாம், “மதவெறியர்” என்றும் குறிப்பிடலாம் அப்படித்தானே ஆ.ராஜா? 

மத நல்லிணக்கத்தைப் பேணுவதில் எங்களுக்கு நிகர் யாருமில்லை என்று மேடைகளில் முழங்கும் திமுகவை  சேர்ந்த நீங்கள், “திமுக கரை வேட்டி கட்டியவுடன் நெற்றியில் உள்ள பொட்டை அழித்துவிடு” என்று கூறுகிறீர்களே, அப்படியானால் இந்துக்களை எதிர்ப்பது தான் திமுக தொண்டனின் தலையாய கடமை என்பதை திரைமறைவில் போதிக்கிறீர்களா?

இந்துக்களை தாசியின் மகன்கள் என்றும், இந்துமதம் உலகிற்கே ஆபத்தானது என்றும் வாய் நிறைந்த வன்மத்தைக் கக்கிய பிறகும் கூட, இந்து மதத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி கடுகளவும் உங்களுக்கு குறையவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP and H Raja Condemn to DMK MK Stalin MP Raja


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->