ஊழல், குடும்ப ஆட்சி என்றால்... பொதுக்கூட்டத்தில் பொங்கியெழுந்த பிரதமர்.!  - Seithipunal
Seithipunal


பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், உங்களுடைய சேவகனாக இந்த மோடி பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். 

தமிழ்நாட்டில் 3.65 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் குழாய் மூலம் தண்ணீர் இணைப்பு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். 

இன்று பெண்கள் சக்தி, மோடியின் பாதுகாப்பு கவசமாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த நலத்திட்டங்கள் பெண்களை வேகமாக வந்து சேரும். 

ஜெயலலிதாவை தி.மு.கவினர் எந்தவிதமாக நடத்தினார்கள் என்பது உங்களுக்கு தெரியும். தி.மு.கவின் பெண்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக ஏப்ரல் 19 பெண்கள் வாக்களிக்க வேண்டும். 

காங்கிரஸ், திமுக என்றாலே ஊழல், குடும்ப ஆட்சி மட்டும்தான். தி.மு.க காங்கிரஸின் ஊழலை பற்றி பேசினால் ஒரு நாள் போதாது. மக்கள் தலைவர் ஜி.கே மூப்பனாரை இந்த சமயத்தில் நினைவூட்டுகிறேன். 

பெருந்தலைவர் காமராசரை போன்ற மாபெரும் தலைவரை தந்த மண் தமிழக மண். பா.ஜ.கவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் பெரிய கனவுகளை நிச்சயம் அடைந்தே தீருவோம் என தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP general meeting PM Modi speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->