வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கட்சி பணியாற்றிய தமிழிசையை பாஜக கைவிட்டு விட்டது - செல்வப்பெருந்தகை!!
BJP has abandoned Tamilisai Selvaperunthagai
நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மீண்டும் மத்திய அமைச்சர்கள் இடம் கொடுத்துள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு ஒரு நீதி தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஒரு நீதி. தமிழிசை சௌந்தரராஜன் பாஜக கைவிட்டு விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்லும் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை பேசுகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் நீட் தேர்வு முடிவுகளும் வெளியானது. நீட் தேர்வில் மிகப் பெரிய குளறுபடி நடந்துள்ளது. இது மாணவர்களை ஏமாற்றம் செயல். நீட் தேர்வு ஒரு வர்த்தக சூதாட்டம். நாளை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை, நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கருக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒரு நீதி தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஒரு நீதி. வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கட்சி பணியாற்றிய தமிழிசை சௌந்தரராஜனை பாஜக கைவிட்டு விட்டது என கூறியுள்ளார்.
English Summary
BJP has abandoned Tamilisai Selvaperunthagai