தமிழகத்தில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா? பாஜக தரப்பில் வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் ரக்சா பந்தன் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.,வும், கட்சித் தொண்டர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு ராக்கிகயிறு கட்டி இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணன் திருப்பதி, தெரிவித்தாவது, "இளைஞர்களின் நலனைக் காக்கும் விதமாக போதைபொருட்கள் கடத்துவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழக அரசும் சில எதிர்க்கட்சிகளும் புதிய மின்சார சட்டத்தை திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த சட்ட திருத்த மசோதா காரணமாக இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வாய்ப்பில்லை. தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினாலும் அதற்கான நிதியை கொடுப்பதில்லை. 

இந்தக் காரணத்தால் மின்  உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நஷ்டத்தில் இயங்கி வருவதுடன், ரூ.1.50 லட்சம் கோடி கடனில் மூழ்கியுள்ளது. இந்தக் கடனை சரி செய்யவே மத்திய அரசு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.

தற்போது, தனியாரிடம் மின் விநியோகம் சென்றாலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும். மத்திய அரசு இலவசம் மின்சாரத் திட்டத்தை நிறுத்துமாறு கூறவில்லை. ஊழலைத்தான் நிறுத்த சொல்கிறது. 

தமிழக அரசு பாஜக சார்பில் பல இடங்களில் தேசியக் கோடி ஏற்ற தடை விதிக்கிறது.
இதை. நாங்கள் வன்மையாகாக் கண்டிக்கிறோம். தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை தொடர்ந்து எதிர்பதையே  நோக்கமாக கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Say About Free Electricity issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->