பிரபல ரவுடியின் பகீர் வாக்குமூலம்... பா.ஜ.க. மாநில நிர்வாகி மீது பாய்ந்த குண்டர்! நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal



செங்கல்பட்டு அருகே ரவுடி சீர்காழி சத்யாவை போலீசார் காலில் சுட்டு கைது செய்த போது அவரிடம் இருந்து கை துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. 

இது குறித்து சத்யாவிடம் விசாரணை மேற்கொண்டத்தில் பா.ஜ.க மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் வாங்கி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதனை தொடர்ந்து ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வாங்கி கொடுத்த விவகாரத்தில் அலெக்சிஸ் சுதாகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் மாவட்ட எஸ்.பி. பரிந்துரை பெயரில் அலெக்சிஸ் சுதாகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இதற்கிடையே பா.ஜ.க மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. மேலும் சுதாகர் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp state executive arrested goondas act


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->