பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் மீண்டும் கைது..!! சென்னை போலீசார் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த பாஜக ஆதரவாளரான உமா கார்த்திகேயன் தனது ட்விட்டர், முகநூல் பக்கங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, பெரியார் மற்றும் திமுக குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக திமுகவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஹரிஸ் என்பவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 20ம் தேதி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் உமா கார்த்திகேயனை கைது செய்திருந்தனர். உமாவை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கடந்த 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்கள் காவலில் எடுத்து கோவை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட உமா கார்த்திகேயன் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னை மாநகர் காவல் துறையினர் உமா கார்த்திகேயனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் நடிகர் விஜய்யை அவதூறாக பேசியதாக அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத்தினர் அளித்த புகாரின் பேரில் உமா கார்த்திகேயனை சென்னை போலீசார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்பொழுது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக உமா கார்த்திகேயனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற பிறகு மீண்டும் பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP supporter uma arrested again by chennai police


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->