உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதுதான் ஊடக தர்மமா? தமிழிசை சௌந்தர்ராஜன் காட்டம்! - Seithipunal
Seithipunal


திமுகவின் ஆதரவு செய்து ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில், "புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்த மூன்று ஆண்டுகளில், அவருக்கு 2.99 கோடி ரூபாய் செலவாகி உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

அரசு விருந்தினர்களுக்கு வழங்கப்படும் பூங்கொத்து, உணவு, மளிகை, எரிவாயு உள்ளிட்ட உட்பட 2021 2022 நிதி ஆண்டில் ரூ.90.86 இலட்சமும், 2022 2023 நிதியாண்டில் ரூ.54.19 லட்சமும், 2023 2024 நிதி ஆண்டில் ரூ.91. 59 லட்சமும் செலவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த செய்தியை குறிப்பிட்டு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கடும் கண்டனத்துடன் பதில் அளித்துள்ளார்.

அதில், "உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதுதான் ஊடக தர்மமா?

தகவல் அறியும் உரிமைச் சட்ட பதிவில் முன்னாள் துணைநிலை ஆளுநர் டாக்டர்.திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆடைக்கென்று தனியாக ஏதும் செலவு செய்யப்படவில்லை என்றும், உதவியாளராக எவரும் நியமிக்கப்படவில்லை என்றும், தனிப்பட்ட முறையிலான செலவு ஏதும் இச்செயலகத்தால் செய்யப்படவில்லை என்றும் விமான போக்குவரத்து செலவுகள் தெலுங்கானா மாநில அரசு ஏற்றுக்கொண்டது என்றும் ஆர்டிஐ பதிவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையின் நிர்வாக செலவுக்கான மொத்த செலவுக்கணக்கையும்....

முன்னாள் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு ஆன செலவுகள் என்று   பொய்யான தகவலை மக்களுக்கு தெரிவிப்பது தான் ஊடக தர்மமா? என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Tamilisai Condemn to News Channel


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->