திருமாவளவன் இப்படி அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நடத்தும் 'மது ஒழிப்பு மாநாடு' நாடகம் இனி எடுபடாது - தமிழிசை காட்டம்!   - Seithipunal
Seithipunal


மது விலக்கு மற்றும் அயர்ச்சி அதிகாரத்தில் பங்கு விவகாரத்தில் விசிக திருமாவளவனின் செயல்கள் கடும் விமரணத்திற்கு ஆளாகியுள்ளது.

அறிவாலயம் சென்று இந்த றில்லை கோரிக்கைகளையும் முன் வைத்தாலே விடை கிடைத்துவிடும். அதைவிடுத்து பொதுவெளியில் திருமாவளவன் பேசுவது அரசியலன்றி வேறு எதுவும் இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இந்நிலையில், பாஜக நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன் இதுகுறித்து தெரிவிக்கையில், "மதுவிலக்கு மாநாட்டால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் கவலை இல்லை என்று புறப்பட்ட திருமாவளவன், இன்று அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்ததும் தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்கிறார்.

திமுக அரசே மதுக்கடைகளை நடத்துகிறது. திமுகவினர் தான் 40 சதவீத மது ஆலைகளையும் நடத்துகிறார்கள். இப்படி இருக்க தேசிய மதுவிலக்கு கொள்கையை மட்டும் ஏற்பார்களா? 

மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் பல ஆண்டுகளாக இருந்த திமுக பாராளுமன்றத்தில் தேசிய மதுவிலக்கு பற்றி தி.மு.க. என்றாவது பேசியதுண்டா? இப்போது கூட விசிக எம்.பி.க்கள் தேசிய மதுவிலக்கு பற்றி பாராளுமன்றத்தில் பேசவில்லையே ஏன்?

இது திருமாவளவனின் அப்பட்டமான அரசியல் நாடகம் அம்பலமாகி விட்டது. திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் குழி பறித்து அசைத்து பார்க்க நினைத்தார். அது நடக்கவில்லை என்றதும், மடை மாற்றி மத்திய அரசு பக்கம் திருப்பி விடுகிறார். 

மக்களை ஏமாற்றாமல் தி.மு.க.வினர் மது ஆலைகளை மூடிவிட்டு பிறகு மதுவுக்கு எதிராக போராடட்டும். திருமாவளவனின் தேர்தல் அரசியல் பேரத்தை இன்னும் எத்தனை நாள்தான் மக்கள் நம்புவார்கள்? இப்படி அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நடத்தும் 'மது ஒழிப்பு மாநாடு' நாடகம் இனி எடுபடாது" என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Tamilisai Condemn to VCK Thirumavalavan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->