பாஜகவில் தனிமனித துதி பாடலுக்கு இடம் கிடையாது - அண்ணாமலை அதிரடி! - Seithipunal
Seithipunal


பாஜகவின் குரல் சாமனிய, தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்று, சென்னையில் பாஜக செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

மேலும், 2026-ம் ஆண்டு ஏழை, எளிய மக்களை சார்ந்து, விவசாயிகளை முன்னிலைப்படுத்திய ஆட்சியை தமிழ்நாட்டில் பாஜக அமைக்கும். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை விட அரசு நூலகம், அரசு மருத்துவமனைகள் குறைவாக உள்ளது.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை ஆகத்தான் உள்ளது. தமிழகத்தில் அனைத்து இடத்திலும் சாதாரண மனிதர் கூட உயிருக்கு உத்தரவாதம் இல்லை

இதனால்தான் புதிய தமிழ்நாட்டை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. கலாச்சாரம், சட்டம் ஒழுங்கு, நீட் ஏன் தேவை உள்ளிட்டவற்றை பற்றி பாஜகவினர் பேச வேண்டும் அண்ணாமலை பேசியுள்ளார்.

பாஜகவினரிடம் சிந்தாந்தம், நேர்மை உள்ளது. பாஜகவில் தனிமனித துதி பாடலுக்கு இடம் கிடையாது. பாஜகவிற்கு உத்வேகம் தான் தேவை. கடந்த ஒரு மாத காலம் பணியாற்றியது போல அடுத்த 2 வருடங்களுக்கு பாஜகவினர் பணியாற்ற வேண்டும் என்றும், செயற்குழு கூட்டத்தில் அண்ணாமலை பேசியுள்ளார்.

சென்னை வானகரத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் பங்கேற்றார்.

மேலும், பாஜகவின் முன்னாள் மாநில தலைவரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில், முன்னாள் நீதிபதி சந்துரு அளித்த அறிக்கையை கண்டிப்பதாக இந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து மற்றும் பாராட்டு, கள்ளச்சாராயம் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரியும் இந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Tamilnadu Annamalai Chennai meet


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->