பாஜகவிற்கு செக் வைத்த தமிழக அரசு! உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு அவசர வழக்கு!
BJP Tamilnadu Bike Road Show Chennai HC TNGovt DMK
பாஜக சார்பில் தமிழகத்தில் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தலைப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், இரு சக்கர வாகன பேரணி நடத்தப்படும் என்று தமிழக பாஜக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஆனால் இந்த இருசக்கர வாகன பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இருசக்கர வாகன பேரணி அனுமதி கேட்டு பாஜக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் பாஜகவின் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
English Summary
BJP Tamilnadu Bike Road Show Chennai HC TNGovt DMK