ராணிப்பேட்டை வணிகர் சங்கம்  இளைஞர் அணி சார்பில்  ரத்ததான முகாம்..  50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினர்!  - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்ட வணிகர் சங்கம்  மாவட்ட இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினார்கள். 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி தனியார் திருமண மண்டபத்தில் ராணிப்பேட்டை மாவட்ட வணிகர் சங்கம் சார்பில் மாவட்ட இளைஞர் அணி துவக்க விழா மற்றும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கு. சரவணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், மாநிலத் துணைத் தலைவர் சௌகத்அலி, மாநில இணைச்செயலாளர் எத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா கலந்து கொண்டு இளைஞர் அணி மற்றும் ரத்ததான முகாமை துவக்கி வைத்து விழா பேருரையாற்றி சிறப்பித்தார். 

இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினார்கள். மாநிலச் செயலாளர் கோவிந்தராஜு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமைச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் ரெட் கிராஸ் ரகுநாதன், மாவட்ட துணைத் தலைவர்கள் பாஸ்கரன், வேலு, கிருஷ்ணன், ஏகாம்பரம், காசி, சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏவிடி. பாலா, நாட்டு மருந்து கடை கணேஷ், உதவும் கரங்கள் சந்திரசேகரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சுபாஷ் ஜெய் மாருதி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இறுதியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஷால் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய வியாபாரிகள், நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Blood donation camp on behalf of Ranipet Merchants Association Youth Wing More than 50 youngsters donated blood


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->