சென்னைவாசிகளே உஷார் : மக்கள் அதிகம் கூடும் மூன்று இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்!!
Bomb threats in three chennai crowded places
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மூன்று இடங்களில் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல். தீவிர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிப்பு.
சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் ஒய்எம்சிஏ கட்டிடம், விமான நிலையம் உள்ளிட்ட மூன்று மிக்கிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் விமான நிலையம் உள்ளிட்ட மூன்று இடங்களையும் தீவிர சோதனை நடத்தினர்.
இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் உள்ள 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உளுக்கியது. பின்னர் பள்ளிகளை ஆய்வு செய்தபோது இமெயில் வந்த தகவல் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குஜராத்திலும் வெடிகுண்டு மிரட்டல் சம்வபம் நடைபெற்றது. தொடர்ந்தது இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் நடப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இன்று காலையில் ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. அதில் சென்னையில் அதிகமாக மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய ஒய்.எம்.சி.ஏ கட்டிடம், விமான நிலையம், உள்ளிட்ட மூன்று இடங்கள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியோடு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய மூன்று இடங்களிலும் தீவிர சோதனை நடத்தியது வெடிகுண்டு சேயலிழப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறை. காலை முதல் நடத்தப்பட்டு வந்த தீவிர சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டது.
English Summary
Bomb threats in three chennai crowded places