13 சிறுமியை ஏமாற்றி சீரழித்த இளைஞர்..போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தக்கோட்டை கிராமத்தில் ராஜா- தேவிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஜித் என்ற மகன் உள்ளார். இவர் மூங்கில் நார் கூடை பின்னும் இருக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித்துக்கும் 13 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அஜித் தனது தாய், தந்தை மற்றும் சிறுமியுடன் சேலம் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டியில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அஜித் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜா, தேவிகா மற்றும் அஜித் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy cheat and married 13 years old girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->