கரூர் : நகைக்காக முதியவர்களை அடித்துக் கொன்ற மர்மநபர்கள் - போலீசார் வலைவீச்சு.!! - Seithipunal
Seithipunal


கரூர் : நகைக்காக முதியவர்களை அடித்துக் கொன்ற மர்மநபர்கள் - போலீசார் வலைவீச்சு.!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கவேல்-தைலி தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

இதனால், தங்கவேலும், தைலியும் கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் அருகே ஓடையூர் பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஒரு மாம்பழ தோட்டத்தை பத்தொன்பது ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து அங்கேயே தங்கி தோட்டத்தை பராமரித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கேவேலுவும் தைலியும் வழக்கம் போல் குடிசையில் தூங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் குடிசைக்குள் புகுந்த தைலியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் அந்த மர்ம நபர்களை தடுத்ததனால் அவர்கள் அடித்து கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைபார்த்த தோட்டத்தின் உரிமையாளர் சரவணன் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தங்கவேல், தைலியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boys kill old couples in karoor for gold robbery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->