பெரும் பரபரப்பு! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிறையில் இருந்த திருமலைக்கு நெஞ்சுவலி!
BSP Armstrong Case Culprit Thirumalai heart attack
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலை என்பவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் ஒவ்வொரு நாளும் ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார் தற்போது வரை 27 பேரை கைது கைது செய்துள்ள நிலையில், மேலும் 3 பேரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இயக்குனர் நெல்சன் மனைவி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரிடம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலை என்பவருக்கு நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி கிளைச்சிறையில் இருந்த திருமலை நெஞ்சுவலியால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 27 பேரில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
BSP Armstrong Case Culprit Thirumalai heart attack