பஸ் ஸ்ட்ரைக் விவகாரம்! அவசரமாக பறந்த கடிதம்!
BUS Strike Issue TNGovt 12012024
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டுவரும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், "கடந்த 9-ந்தேதி 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தத்தை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், பொது மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 11-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி விட்டனர்.
மேலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்க, அதன் அடிப்படையில் நீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது.
எனவே நீதிமன்ற உத்தரவின்படி யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. பழி வாங்கும் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.அவர்கள் ஏற்கனவே செய்த பணியை தொடர்ந்து செய்ய அனுமதிக்க வேண்டும்.
மேலும் 19-ந்தேதி நடைபெறும் சமரச பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள நியாயமான கோரிக்கைகளை தீர்த்து தர முன்வர வேண்டும்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
BUS Strike Issue TNGovt 12012024