சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. இனி ஒரே டிக்கெட் மூலம் பேருந்து, ரயில், மெட்ரோவில் பயணிக்கலாம்.! - Seithipunal
Seithipunal


ஒரே டிக்கெட்டில் மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

சமீபத்தில் சென்னையில் ஒரே டிக்கெட்டில் மாநகர பேருந்து, புறநகர் ரயில் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், புறநகர் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர். 

இந்தநிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான இறுதி கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஒரே டிக்கெட் முறையை சென்னையில் செயல்படுத்துவதற்கான மத்திய அரசின் சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்யூட்டிங் நிறுவனத்துடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து ஒரே டிக்கெட் மூலம் மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bus, train, metro train spare for one ticket soon in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->