அடுத்த அதிரடி.. வழக்கறிஞர் அணிக்கான டாஸ்க் இது தான்.. புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு.!!
Bussy Anand assigned tasks to the legal wing
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக விரைவில் மாற்றும் நோக்கில் பல்வேறு மக்கள் நலத் பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் அன்னதானம் மற்றும் ஏழை நலத்திட்டங்களை உதவி, மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தொகுதி வாரியாக தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் இரவு நேர பாடசாலையை தொடங்கினார்.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள வழக்கறிஞர்கள் கொண்டு வழக்கறிஞர் அணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த அணியின் ஆலோசனை கூட்டம் இன்று விஜயின் பனையூர் அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. நாளை வரை இந்த கூட்டம் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் சுமார் 350-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்களுக்கு சில அடிப்படை பணிகளை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கி உள்ளார். அதன்படி,
1) மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்காணித்து அவற்றை மாவட்ட தலைவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
2) தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்களை பெற்று தொகுக்க வேண்டும்.
3) பொதுநல வழக்குகள் பதிவு செய்யும் வழக்கறிஞர்களின் தகவல்களையும் அவர்களது வழக்குகளின் நிலை குறித்தும் கண்காணிக்க வேண்டும்.
4) தமிழக மக்களின் உரிமையை காக்கும் வழக்குகளில் மனுதாரராக இணைந்து அந்த வழக்கின் மூலம் மக்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும்.
5) இயக்க நிர்வாகிகள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்படும் வழக்குகளுக்கு சட்ட ஆலோசனை வழங்க குலுக்கல் அமைக்க மாவட்ட தலைவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
6) மக்கள் இயக்க நிர்வாகிகளின் தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்த்து தர முயற்சிக்க வேண்டும்.
7) உறுப்பினர்களுக்கு அடிப்படை சட்டங்கள் சொல்லித் தர வேண்டும்.
8) சமூக வலைதள பதிவுகளால் போடப்படும் சைபர் கிரைம் வழக்குகளிலும் உதவ வேண்டும்.
9) அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது போடப்படும் வழக்குகளுக்கு விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணியினர் சட்ட உதவிகள் செய்திட வேண்டும் உள்ளிட்ட பணிகள் முதற்கட்டமாக விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி வழங்கப்பட்டுள்ளத.
English Summary
Bussy Anand assigned tasks to the legal wing