2026-ல் த.வெ.க தலைவர் விஜய் தான் முதலமைச்சர் - புஸ்ஸி ஆனந்த் திட்ட வட்டம்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் வருகின்ற அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடிகர் விஜய் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மாநாடு குறித்த முக்கிய முடிவுகளும், முன்னேற்பாடுகளும் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய த.வெ.க கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் த.வெ.க-வின் முதல் மாநாட்டில் பெண்கள் தான் அதிகமாக பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. காவல்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன். நம்முடைய இலக்கு 2026 தான். 2026-ல் த.வெ.க தலைவர் விஜய் தான் முதலமைச்சர். தளபதி என்றால் அது நம்முடைய தலைவர் ஒரே ஒருவர் தான்" என்று ஆணித்தரமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bussy anand speech tvk leader vijay cm in 2026


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->