இதுவே பிரதான இலக்கு... விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - தவெக வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என  மும்முனை போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வெளியிட்ட கட்சி தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கழக தலைவர் அவர்கள் விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல் திட்டங்களை தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு அதன் தொடர்ச்சியாக கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள் தமிழக முழுவதும் மக்கள் சந்திப்பு பயணங்கள் என வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என தெரிவித்துள்ளார். 

எனவே அதுவரை இடைப்பட்ட காலங்களில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாதே என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

குறிப்பாக வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது எனவும் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது எனவும் தமிழக வெற்றிக்கழக தலைவர் அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bussy Anand statement about vikravandi byelection


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->