ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய மக்கள் குறைதீர் முகாம்! சென்னை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்! - Seithipunal
Seithipunal


குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய விரும்புவோர் வசதியாக அக்டோபர் 8ம் தேதி மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் "பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் வகையில் தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னைக்குட்பட்ட 19 மண்டல உதவிய ஆணையர் அலுவலகங்களில் அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்டம் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 08-10-2022 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை பெறுவது, கைபேசி எண் பதிவு அல்லது மாற்றுதல், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை வழங்க உள்ளனர்.

வயதானவர்கள் நியாய விலை கடைகளுக்கு பொருள் பெற நேரில் வருகை தர இயலாது என்ற அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் நியாயவிலைக் கடைகளில் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவைகளின் குறைபாடுகள் குறித்து புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவிக்கலாம். அந்த புகாரின் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Camp to amend the ration card in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->