நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது தொடர் வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. உதய சூரியன் சின்னத்திலும் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கி வாக்குகள் சேகரித்து வருகிறார். இதேபோன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இதற்கிடையே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஈரோடு டவுன், கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேட்பாளர் சீதாலட்சுமி நேற்று மாலையில் பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் தனது கட்சியினருடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர்கள் அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு மாநகர போலீசில் புகார் அளித்தனர். 

அதன் படி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file against ntk candidate in erode for by election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->